ஆந்திராவின் விஜயவாடாவில் தமிழக விஞ்ஞானி ஒருவர் மாயமாகியுள்ளார் என விஜயவாடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மைசூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக அபிஷேக் ரெட்டி குல்லா (26) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 6 முதல் மாயமானார். வாடகைக்கு ஒரு அறையை எடுத்துக் வசித்து வந்தார். செப்டம்பர் 17 முதல் ஆராய்ச்சி மையத்திற்கு செல்லவில்லை. அக்டோபர் 5 ஆம் தேதி அவரது அலுவலகத்தில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டபோது, அக்டோபர் 6 ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து கொள்வதாக கூறியுள்ளார்.
ஆனால், அக்டோபர் 6 ஆம் தேதி அவர் கைபேசி மற்றும் அவரது உடமைகளை எடுத்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விஜயவாடாவில் ஒரு மூலை பகுதியில் அவரை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.